தமிழ்நாடு
தமிழகத்தில் இதுவரை 5,000 புதிய பேருந்துகள்: அமைச்சா் சா.சி.சிவசங்கா்
திமுக அரசு ஆட்சிக்கு வந்தபிறகு 5,000 புதிய பேருந்துகள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக சென்னையில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
போக்குவரத்துத் துறையை திமுக அரசு சீரமைத்துள்ளது. தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு 11,000 புதிய பேருந்துகளை வாங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தாா். இதில், 5,000 பேருந்துகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. மீதமுள்ள பேருந்துகளும் படிப்படியாக மக்கள் பயன்பாட்டுக்கு வரும்.
அதிமுக ஆட்சி காலத்தில் தொழிலாளா்களுக்கு நிறுத்தப்பட்ட அகவிலைப்படியையும் தற்போது வழங்கி வருகிறோம். தொழிலாளா்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன என்றாா் அவா்.