எந்த கொள்கையும் இல்லாத கட்சி தவெக: நயினார் நாகேந்திரன்

எந்த கொள்கையும் இல்லாத கட்சி தவெக என்று பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
Nainar Nagendran
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்கோப்புப்படம்.
Published on
Updated on
1 min read

எந்த கொள்கையும் இல்லாத கட்சி தவெக என்று பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் பூத் கமிட்டி இன்று மாலை 6 மணி அளவில் தச்சநல்லூர் பகுதியில் உள்ள மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு தமிழகத்தில் இருந்து ஏராளமான பாரதி ஜனதா கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். இதில் சிறப்பு அழைப்பாளராக மத்திய அமைச்சர் அமித் ஷாவும் கலந்து கொள்கிறார். இதற்காக பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸார் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் மாநாட்டு திடலில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், பாரதி ஜனதா கட்சி இந்தியா முழுவதும் 1652 எம்எல்ஏக்களைக் கொண்டுள்ளது. 330 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். உலகத்திலேயே மிகப்பெரிய தலைவர் எங்க தலைவர் நரேந்திர மோடி. உலகத்திலே மிகப்பெரிய கட்சி எங்கள் கட்சிதான். நடிகர் விஜய் இப்போதுதான் கட்சி ஆரம்பித்து உள்ளார்.

ஆனால் அவர் இரண்டு மாநாடு நடத்திவிட்டு எங்கள் எதிரி கட்சி பாரதிய ஜனதா என்று கூறுவதை நான் எப்படி பார்க்கிறேன் என்பதை விட நீங்கள் பத்திரிகையாளர்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார். மேலும் எந்தவித ஒரு கொள்கையும் இல்லாமல் ஆரம்பிக்கப்பட்டு ஐந்து தலைவர்களைக் காண்பித்து இதுதான் எங்கள் கொள்கை என்றால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். பாரதிய ஜனதா, அதிமுக கூட்டணி அடிமை கூட்டணி என விஜய் கூறுகிறார் என்ற கேள்விக்கு, எனக்கு இது பற்றி எதுவும் தெரியாது.

குடியரசுத் தலைவருடன் சுபான்ஷு சுக்லா சந்திப்பு!

அப்படி எனக்கு யாராவது கூறி தெரிய வந்தால் அதற்குரிய தக்க பதிலடி தரப்படும். அதிமுக, பாரதிய ஜனதா பொருந்தாத கூட்டணியா என்ற கேள்விக்கும், எந்த ஒரு கொள்கைப் பிடிப்பும் இல்லாத கட்சியை ஆரம்பித்து விட்டு அவர் எங்கள் கூட்டணி பற்றி எந்த நியாயத்தின் அடிப்படையில் கூறுகிறார் என்று தெரியவில்லை. கதைகள் எல்லாரும் கூறுகிறார்கள், தமிழக மக்கள் எல்லோருடைய கதைகளையும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்றார்.

Summary

BJP leader Nainar Nagendran stated that TVK is a party with no ideology.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com