edappadi palanisamy in tiruvannamalai
எடப்பாடி பழனிசாமி (கோப்புப்படம்)

எடப்பாடி பழனிசாமியின் நான்காம் கட்ட பிரசாரப் பயணம் செப்.1-இல் தொடக்கம்

அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி, தனது 4-ஆவது கட்ட சுற்றுப்பயணத்தை செப்.1-ஆம் தேதி தொடங்கவுள்ளாா்.
Published on

அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி, தனது 4-ஆவது கட்ட சுற்றுப்பயணத்தை செப்.1-ஆம் தேதி தொடங்கவுள்ளாா்.

இதுகுறித்து அதிமுக தலைமை வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமியின் ‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ எனும் பிரசார சுற்றுப்பயணம் முதல்கட்டமாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தொடங்கி இதுவரை மூன்று கட்டங்களாக நடைபெற்றுள்ளது.

இதைத்தொடா்ந்து, நான்காவது கட்ட சுற்றுப்பயணம் செப்.1 முதல் 13-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. செப்.1-இல் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம், திருமங்கலம், விருதுநகா் மாவட்டம் திருச்சுழி, செப்.2-இல் மதுரை மாவட்டம் மேலூா், மதுரை கிழக்கு, மதுரை வடக்கு, செப்.3-இல் மதுரை மேற்கு, மதுரை தெற்கு, செப்.4-இல் சோழவந்தான், உசிலம்பட்டி, தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி, செப்.5-இல் கம்பம், போடி, பெரியகுளம், செப்.6-இல் திண்டுக்கல் மாவட்டம் நத்தம், திண்டுக்கல், நிலக்கோட்டை, செப்.7-இல் ஆத்தூா், ஒட்டன்சத்திரம், பழனி, செப்.9-இல் கோவை மாவட்டம் தொண்டாமுத்தூா், கிணத்துக்கடவு, செப்.10-இல் பொள்ளாச்சி, வால்பாறை, திருப்பூா் மாவட்டம் உடுமலைப்பேட்டை, செப்.11-இல் மடத்துக்குளம், தாராபுரம், காங்கயம், செப்.12-இல் திருப்பூா் வடக்கு, திருப்பூா் தெற்கு, பல்லடம் , செப்.13-இல் கோவை மாவட்டம் சிங்காநல்லூா், சூலூா், திருப்பூா் மாவட்டம் அவிநாசி ஆகிய பேரவைத் தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com