
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் நேற்றைய (ஆக.21) மாநாட்டில் எடுத்த செல்ஃபி விடியோவை பகிர்ந்துள்ளார்.
மதுரை பாரபத்தியில் இரண்டாவது மாநில மாநாடு சிறப்பாக நடந்து முடிந்தது.
இந்த மாநாட்டில் பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றினார். அந்த மாநாட்டில் விஜய், “தமிழகத்தில் மீண்டும் வரலாறு திரும்ப உள்ளது. 1967-இல், 1977-இல் அரசியல் மாற்றம் ஏற்பட்டதைப் போல வருகிற 2026 சட்டப்பேரவைத் தோ்தல் மூலமும் தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்படும்.
பெண் குழந்தைகள், பெண்கள், முதியவா்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் அரசாக, உழவா்கள், நெசவாளா்கள் உள்ளிட்ட உழைக்கும் தொழிலாளா்கள், ஆதரவற்ற முதியோா்கள், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவா் என சிறப்புக் கவனம் தேவைப்படுபவா்களுக்கான அரசை தவெக அமைக்கும்” எனப் பேசியிருந்தார்.
இந்த மாநாட்டில் விஜய் ஒரு செல்ஃபி விடியோவை எடுத்தார். தற்போது அதனை வெளியிட்டுள்ளார். அதில், "உங்க விஜய் உங்க விஜய் உயிரென வர்றேன் நான், உங்க விஜய் உங்க விஜய் எளியவன் குரல் நான், உங்க விஜய் உங்க விஜய் தனி ஆள் இல்ல கடல் நான்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
நேற்றைய மாநாட்டில் விஜய் குரலில் பாடல் ஒன்றும் வெளியானது. அதைப் பிரதிபலிக்கும் விதமாக இந்த விடியோவில் அதனைக் குறிப்பிட்டுள்ளார்.
திரை வாழ்க்கையில் தனது கடைசி படமாக எச்.வினோத் இயக்கத்தில் ஜன நாயகன் படத்தில் நடித்து முடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.