தமிழில் பேச முடியவில்லையே என வருந்துகிறேன்: அமித் ஷா

தமிழகத்தில், உங்கள் முன்னிலையில், தமிழில் பேச முடியவில்லையே என வருந்துகிறேன் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.
உள்துறை அமைச்சர் அமித் ஷா
உள்துறை அமைச்சர் அமித் ஷா
Published on
Updated on
1 min read

நெல்லை: தமிழில் பேச முடியாததற்கு வருந்துகிறேன் என்று நெல்லையில் நடைபெற்ற பாஜக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருக்கிறார்.

நெல்லை வண்ணார்பேட்டை வடக்கு புறவழிச்சாலையில் பிரமாண்டமாகத் தொடங்கியிருக்கிறது நெல்லை பாஜக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாடு. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர். இதில் பங்கேற்க உள்துறை அமைச்சர் புது தில்லியிலிருந்து நெல்லை வந்தார்.

பாஜக மாநில தலைவர் முன்னாள் தலைவர் அண்ணாமலை, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உரையாற்றிய நிலையில், நெல்லை பாஜக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாட்டில் பங்கேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசி வருகிறார்.

அவர் பேசுகையில், மறைந்த நாகாலாந்து ஆளுநர் இல. கணேசன் ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன். பாஜகவுக்காக பல தியாகங்கள் செய்தவர் இல. கணேசன்.

தமிழ் மண்ணைச் சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணனை மிக உயரிய பொறுப்பான துணைக் குடியரசுத் தலைவர் பொறுப்புக்கு முன்னிறுத்திய பிரதமருக்கும் பாஜக தேசிய தலைவருக்கும் முதலில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மாநிலங்களவையின் தலைவராக துணைக் குடியரசுத் தலைவர், இந்த மண்ணைத் சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணன் ஆகப்போகிறார் என்ற மகிழ்ச்சியை உங்களிடம் தெரிவித்துக் கொள்கிறேன். தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் முதல் முதலில் தமிழகத்தின் விஞ்ஞானியான ஏபிஜே அப்துல் கலாமை குடியரசுத் தலைவராக அமர்த்தி அழகு பார்த்தோம்.

பிரதமர் நரேந்திர மோடி எப்போதும் தமிழ் மண்ணையும் தமிழ் மக்களை மதிக்கக் கூடியவராக இருந்து வருகிறார். தமிழ் மண், மக்கள், பண்பாடு ஆகியவை பாதுகாத்து கொண்டாடும் வகையில் தஞ்சை ராஜேந்திர சோழனுக்கு மாபெரும் விழா எடுத்து கௌரவப்படுத்தியவர் பிரதமர்.

காசி தமிழ் சங்கம் என்ற நிகழ்வு ஆண்டாண்டாக நடத்தி வருகிறார்கள். சௌராஷ்ட்ரா தமிழ் சங்க விழா நடத்தப்பட்டு வருகிறது. தெய்வீக புலவர் திருவள்ளுவரின் திருக்குறளை 13 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்து தமிழுக்கு அணி சேர்த்துள்ளார்

மதத்தின் பெயரால் அப்பாவி பொதுமக்களை கொலை செய்த மிகப்பெரிய துக்ககரமான நிகழ்வு பஹல்காமில் நடந்தது.

வேரோடு தீவிரவாதிகளை அழிக்கும் வகையில் பாகிஸ்தானில், வீடு புகுந்து அவர்களை தாக்கி ஆபரேஷன் சிந்தூர் திட்டத்தின் மூலம் பிரதமர் சாதனை படைத்துள்ளார்.

ஆப்பரேஷன் சிந்தூர் மூலம் தீவிரவாதத்தின் முதுகெலும்பை உடைத்து காட்டி உள்ளார் பிரதமர். ஆபரேஷன் மகாதேவ் மூலம் தீவிரவாதிகள் கண்டறிந்து அழிக்கப்பட்டார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com