எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க வேண்டியது கடமை: அண்ணாமலை

எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க வேண்டியது தேஜகூ தொண்டர்களின் கடமை என்று அண்ணாமலை பேசினார்.
It is our duty to make Edappadi Palaniswami the Chief Minister: Annamalai
மநாட்டில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை.
Published on
Updated on
1 min read

நெல்லை: தமிழகத்தில், எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க வேண்டியது தேசிய ஜனநாயகக் கூட்டணி தொண்டர்களின் கடமை என்று முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருக்கிறார்.

அமித் ஷா தலைமையில் நெல்லையில் பாஜக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த மாநாட்டில், சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள், செயல் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.

நெல்லையில் பாஜகவின் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாடு தொடங்கிய நிலையில், தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசி வருகிறார்.

அவர் பேசுகையில், எதைப் பார்த்தாலும் பயப்படுகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின். அடுத்த 8 மாதங்கள் நமக்கானவை. பூத் பொறுப்பாளர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்டவை தேர்தலுக்கான பணிகளைத் தொடங்கிவிட்டன.

பாஜகவை பொறுத்தவரை வடமாநிலங்களில் கொடிகட்டி பறக்கும் நிலையில், தென் மாநிலங்களில் குறிப்பாக, தமிழகத்தில் கணிசமான தொகுதிகளில் வெல்ல வேண்டும் என்ற முனைப்போடு செயல்பட்டு வருகிறது.

அதன்படி அக்கட்சியின் மாநில தலைவரான நயினார் நாகேந்திரனும், ஓய்வறியாமல் தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தலுக்கு முதுகெலும்பாக விளங்கக்கூடிய பூத் கமிட்டிகளை ஆய்வு செய்து அந்த பணிகளை விரைந்து முடிக்க நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி வருகிறார்.

அதன் தொடர்ச்சியாக பூத் கமிட்டி பொறுப்பாளர்களை உள்ளடக்கிய மண்டல வாரியான மாநாடுகளை அவர் அறிவித்திருந்தார். அதன்படி நெல்லையை தலைமையிடமாக கொண்டு முதல் மண்டல மாநாடு இன்று தொடங்கியிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com