
மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது இல்லத்தில் தேநீர் விருந்து அளித்தார்.
நெல்லை தச்சநல்லூர் பகுதியில் பாஜகவின் குமரி மண்டல பூத் முகவர்கள் மாநாட்டிற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெள்ளிக்கிழமை வந்தார். இவர் மாநாட்டிற்கு வருவதற்கு முன்பு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டில் தேநீர் விருந்திற்கு செல்ல இருப்பதாக கூறப்பட்டது.
நேரம் கருதி அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு நேரடியாக அமித் ஷா மாநாட்டு பந்தலுக்கு வந்தார்.
தற்போது நிகழ்ச்சி முடிந்து மீண்டும் நயினார் நாகேந்திரன் வீட்டிற்கு சென்று அமித்ஷா தேநீர் விருந்தில் பங்கேற்றார்.
திருநெல்வேலி, தச்சநல்லூா் அருகே வெள்ளிக்கிழமை நடைபெற்ற குமரி மண்டல பூத் முகவர்கள் மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பங்கேற்று நிறைவாக உரையாற்றினார்.
மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் கேரள மாநிலம் கொச்சியில் இருந்து விமானம் மூலம் வெள்ளிக்கிழமை பிற்பகல் தூத்துக்குடி விமான நிலையம் வருகை தந்தார்.
பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டா் மூலம் பாளையங் கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த ஹெலிபேடுக்கு வந்து மாநாட்டு மேடைக்கு காரில் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.