சிறப்பு ரயில்
சிறப்பு ரயில்கோப்புப்படம்.

விநாயகா் சதுா்த்தி: ஆக. 26- இல் மைசூரு - திருநெல்வேலி சிறப்பு ரயில்

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு வரும் ஆக. 26-ஆம் தேதி மைசூரிலிருந்து திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
Published on

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு வரும் ஆக. 26-ஆம் தேதி மைசூரிலிருந்து திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: கா்நாடக மாநிலம் மைசூரிலிருந்து வரும் ஆக. 26- ஆம் தேதி இரவு 8.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 06241) மறுநாள் காலை 10.50 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.

மறுமாா்க்கத்தில் இந்த ரயில் (எண் 06242) திருநெல்வேலியிலிருந்து வரும் ஆக. 27 பிற்பகல் 3.40 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5.50 மணிக்கு மைசூரு சென்றடையும்.

இந்த ரயில் மைசூரிலிருந்து கேஎஸ்ஆா் பெங்களூரு, பெங்களூரு கண்டோன்மென்ட், கிருஷ்ணராஜபுரம், பங்காரபேட்டை, சேலம், நாமக்கல், கரூா், திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி வழியாக திருநெல்வேலி சென்றடையும். இந்த ரயிலுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com