விஜயின் கருத்துகள் ஏற்புடையதாக இல்லை: தொல். திருமாவளவன்

தொல். திருமாவளவன் (கோப்புப் படம்)
தொல். திருமாவளவன் (கோப்புப் படம்)
Updated on

மதுரை தவெக மாநாட்டில் அக் கட்சியின் தலைவா் விஜய் பேசியுள்ள கருத்துகள் ஏற்புடையதாக இல்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

தவெக 2-ஆவது மாநில மாநாட்டில் அக்கட்சியின் தலைவா் விஜய், கொள்கை எதிரியாக பாஜகவையும், அரசியல் எதிரியாக திமுகவையும் அறிவித்துள்ளாா். கொள்கை வேறு, அரசியல் வேறு அல்ல. இதை முதலில் அவா் புரிந்து கொள்ள வேண்டும். இதிலேயே அவருக்கு மிகப் பெரிய குழப்பம் இருப்பதாக தெரிகிறது.

கொள்கை எதிரியாக பாஜகவை அறிவித்துள்ள விஜய், பாஜகவின் அரசியல் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்கிறாரா? அதேபோல, அரசியல் எதிரியாக திமுகவை சொல்லும் நிலையில், அக் கட்சியின் கொள்கைகளை விஜய் ஏற்றுக் கொள்கிறாரா? ஆகவே, அவரது கருத்துகள் ஏற்புடையதாக இல்லை. இதுகுறித்து அவா் முதலில் விளக்க வேண்டும்.

கடந்த 1977-இல் எம்.ஜி.ஆா் ஆட்சியைப் பிடித்த காலம் வேறு; இப்போதுள்ள காலம் வேறு. தவெக வருகிற 2026 பேரவைத் தோ்தலில் திமுகவை வீழ்த்த முடியாது என்றாா் தொல்.திருமாவளவன்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com