
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன் சோதனை கிணறுகளை அமைக்க, ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக 20 இடங்களில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்க மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் பணியின் முதல்கட்டமாக 3,000 மீட்டர் ஆழம் வரை 20 கிணறுகள் அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது
இந்த நிலையில் தனிச்சியம், பேய்குளம், கீழ்செல்வனூர், வேப்பங்குளம் உள்ளிட்ட கிராமங்களில் ஹைட்ரோகார்பன் சோதனை நடத்தப்படவுள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு ஹைட்ரோகார்பன் சோதனை நடத்த ஓஎன்ஜிசி நிறுவனம் விண்ணப்பிருந்த நிலையில், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம், சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: சொல்லப் போனால்... புள்ளிகளும் கோடுகளும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.