
தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி ஞாயிற்றுக்கிழமை இரவே தில்லியிலிருந்து சென்னை திரும்பினாா்.
ஆளுநா் ஆா்.என்.ரவி, கடந்த ஆக. 20-ஆம் தேதி தில்லி சென்றாா். தில்லி பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா், மத்திய அமைச்சா்களை சந்தித்த பின், சனிக்கிழமை மாலை அவசரமாக சென்னை திரும்பினாா்.
எனினும், ஞாயிற்றுக்கிழமை காலை மீண்டும் தில்லி புறப்பட்டு சென்ற அவா், அங்கு நியூ மோத்தி பாக்கில் உள்ள தனது குடும்பத்தினரைச் சந்தித்த பின்னர் இரவே மனைவியுடன் சென்னை திரும்பினார்.
தனிப்பட்ட காரணங்களுக்காக அவா் சனிக்கிழமை சென்னை வந்ததாக ஆளுநா் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.