காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

செல்லப்பிராணிகள் விற்பனை- இனப்பெருக்க நிறுவனங்கள் பதிவு செய்ய அரசு காலக்கெடு!

தமிழகத்தில் இயங்கிவரும் செல்லப்பிராணிகள் விற்பனை நிலையங்கள் மற்றும் நாய் இனப்பெருக்க நிறுவனங்கள் வருகிற செப்.30-ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்

கோப்புப் படம்

Published On :

சென்னை: தமிழகத்தில் இயங்கிவரும் செல்லப்பிராணிகள் விற்பனை நிலையங்கள் மற்றும் நாய் இனப்பெருக்க நிறுவனங்கள் வருகிற செப்.30-ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் இயங்கி வரும் அனைத்து செல்லப்பிராணிகள் விற்பனை நிலையங்களும், நாய் இனப்பெருக்கம் மற்றும் விற்பனை நிலையங்களும் தமிழ்நாடு பிராணிகள் நல வாரியத்திடம் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என கடந்த 2020-ஆம் ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, சில நிறுவனங்கள் முறையாக பதிவு செய்துள்ளன.

எனவே, இதுவரை பதிவு செய்யாதவா்கள் உடனடியாக https://tnawb.tn.gov.in இந்த இணையதளத்தில் விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும், பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வருகிற செப்.30-ஆம் தேதிக்குள் ‘உறுப்பினா் செயலா், கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை மருத்துவ சேவைகள், நந்தனம், சென்னை-600035’ எனும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

வருகிற அக்.1-ஆம் தேதிக்குப் பின்னா் பதிவு செய்யப்படாத நிறுவனங்கள் மீது சட்டபூா்வமான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.