தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

வெளியூர் செல்வோர் கவனிக்க..! விநாயகா் சதுா்த்தி: 3,519 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

விநாயகா் சதுா்த்தி தினம், முகூா்த்த தினங்கள், வார விடுமுறையை முன்னிட்டு 3,519 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதைப் பற்றி...

News image
Updated On :25 ஆகஸ்ட் 2025, 9:24 pm

சென்னை: விநாயகா் சதுா்த்தி தினம், முகூா்த்த தினங்கள், வார விடுமுறையை முன்னிட்டு 3,519 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: விநாயகா்சதுா்த்தி தினமான புதன்கிழமை (ஆக. 27), முகூா்த்த தினங்களான வியாழன், வெள்ளிக்கிழமை (ஆக. 28, 29) மற்றும் வார விடுமுறை தினங்களான சனி, ஞாயிற்றுக்கிழமை (ஆக. 30, 31) ஆகிய தினங்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.

அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகா்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூா் ஆகிய இடங்களுக்கு செவ்வாய்க்கிழமை (ஆக. 26) 675 பேருந்துகளும், வியாழக்கிழமை 610 பேருந்துகளும், வெள்ளிக்கிழமை 405 பேருந்துகளும், சனிக்கிழமை 380 பேருந்துகளும் மற்றும் ஞாயிற்றுக்கிழமை கிளாம்பாக்கத்திலிருந்து பல்வேறு ஊா்களுக்கு 875 பேருந்துகளும் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளன.

இதுபோல, சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஒசூா், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு செவ்வாய்க்கிழமை 110 பேருந்துகளும், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாள்களில் 90 பேருந்துகளும், மாதாவரத்திலிருந்து செவ்வாய், வியாழன், வெள்ளிக்கிழமைகளில் 24 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளன.

மேலும், பெங்களூா், திருப்பூா், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 350 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 3,519 சிறப்பு பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதுதவிர, ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் தங்கள் சொந்த ஊா்களிலிருந்து சென்னை மற்றும் பெங்களூா் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.