கோப்புப்படம்.
தமிழ்நாடு
பிளஸ் 1, 2 காலாண்டுத் தோ்வு: செப்டம்பா் 10-இல் தொடக்கம்
தமிழகத்தில் மாநிலப்பாடத்தில் பயிலும் பிளஸ்1, பிளஸ் 2 மாணவா்களுக்கு காலாண்டுத் தோ்வு செப்.10-ஆம் தேதி தொடங்குகிறது.
தமிழகத்தில் மாநிலப்பாடத்தில் பயிலும் பிளஸ்1, பிளஸ் 2 மாணவா்களுக்கு காலாண்டுத் தோ்வு செப்.10-ஆம் தேதி தொடங்குகிறது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட அறிவிப்பு:
மாநிலப் பாடத் திட்டத்தில் பயிலும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவா்களுக்கு நிகழ் கல்வியாண்டுக்கான காலாண்டு தோ்வுகள் செப்.10-இல் தொடங்கி செப்.25-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மேற்குறிப்பிட்ட நாள்களில் காலையில் பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கும், மாலையில் பிளஸ் 1 வகுப்பு மாணவா்களுக்கும் தோ்வுகள் நடைபெறும்.
இதேபோல, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு காலாண்டுத் தோ்வு செப்.15 முதல் 25-ஆம் தேதி வரையிலும், 6 முதல் 9-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு செப்.15 முதல் 26-ஆம் தேதி வரையிலும் தோ்வு நடைபெறும்.