கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

திட்டமிட்டதற்கு முன்பே பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் சோதனை நிறைவு!

சென்னை பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் சோதனை பற்றி...

News image

கோப்புப் படம்

Updated On :26 ஆகஸ்ட் 2025, 12:30 pm

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை பூந்தமல்லி - போரூர் இடையிலான மெட்ரோ ரயில் வழித்தடங்களுக்கு பாதுகாப்பு சான்றிதழ்கள் பெறுவதற்கான சோதனை நிறைவடைந்தாக மெட்ரோ ரயில் நிர்வாகம் கூறியுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

"​சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், இரண்டாம் கட்ட திட்டத்தின் கீழ், வழித்தடம் 4-ல் பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் போரூர் சந்திப்பு மெட்ரோ நிலையம் வரை மெட்ரோ ரயில்கள் மற்றும் வழித்தடங்களுக்கு பாதுகாப்பு சான்றிதழ் பெறுவதற்கான சோதனைகளை நிறைவு செய்துள்ளது. ​

இந்தச் சோதனைகள் மெட்ரோ ரயில் பெட்டிகளுக்கான சான்றிதழைப் பெறுவதற்குப் பின்பற்றப்படும் நடைமுறைகளின்படி, ரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய ரயில்வே ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பை (RDSO - Research Designs and Standards Organisation) சேர்ந்த அதிகாரிகள் குழுவால் நடத்தப்பட்டது.

ஆகஸ்ட் 16, 2025 அன்று தொடங்கிய இந்த சோதனைகளில் மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு பயணிகளின் பயண வசதிமதிப்பீடு செய்யப்பட்டது. அத்துடன், வழித்தடத்தில் ரயில்களின் இழுவை மற்றும் பிரேக்கிங் செயல்திறன்(verification of traction and braking performance) பற்றிய விரிவான சரிபார்ப்பும் செய்யப்பட்டது.

கீழே கொடுக்கப்பட்டுள்ள காரணிகளின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது:

1. பயணத் தரம் (Ride quality): மெட்ரோ ரயிலில் பயணிப்பது பயணிகளுக்கு எவ்வளவு வசதியானது என்பதை அறிய, மெட்ரோ ரயில் பெட்டிகள் மற்றும் தண்டவாளத்தின் தரம் மதிப்பீடு செய்யப்பட்டது.

2. பயணிகளின் பாதுகாப்பு (Passenger Safety): மின்சாரம், காற்றழுத்தம் மற்றும் அவசர காலங்களில் பயன்படுத்தப்படும் பிரேக் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் மதிப்பீடு செய்யப்பட்டது. இதில், பிரேக் அமைப்பு மற்றும் ஒட்டுமொத்த ரயில் கட்டுமானமும் பயணிகளுக்கு பாதுகாப்பான பயணத்தை வழங்குகிறதா என்பதை அறிக்கை சரிபார்க்கிறது.

மெட்ரோ ரயில் பெட்டிகளைத் தயாரிக்கும்போது, அதன் வடிவமைப்பு அம்சங்கள் பின்பற்றப்பட்டுள்ளன என்பதை இந்த வெற்றிகரமான சோதனைகள் நிரூபிக்கின்றன.

​மேலும், திட்டமிடப்பட்ட தேதிக்கு முன்னதாகவே சோதனைகள் நிறைவடைந்துள்ளது. இது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பாதுகாப்பு மற்றும் தர நிலைகளை பின்பற்றியுள்ளது என்பதை நிரூபிக்கிறது" என்று கூறப்பட்டுள்ளது.

Summary

Chennai Metro Rail Completed Trials Ahead of Schedule in Poonamalli - Porur route

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.