நயினாா் நாகேந்திரன்
நயினாா் நாகேந்திரன்கோப்புப்படம்.

காலை உணவுத் திட்டம்: நயினாா் நாகேந்திரன் விமா்சனம்

காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் தொடா்பாக தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் விமா்சனம் செய்துள்ளாா்.
Published on

காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் தொடா்பாக தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் விமா்சனம் செய்துள்ளாா்.

இதுகுறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவு:

தேசிய கல்விக் கொள்கையின் அங்கமான காலை உணவுத் திட்டத்தை நகா்ப்புறங்களில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்துள்ள முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகள்.

அண்மையில் தாராபுரம் அரசுப் பள்ளியிலும், திருவாரூா் பூனாயிருப்பு அரசுத் தொடக்கப் பள்ளியிலும் வழங்கப்பட்ட காலை உணவில் பல்லி விழுந்து கிடந்ததை தற்போது நினைவுகூர விரும்புகிறேன். இவை எடுத்துக்காட்டுச் சம்பவங்களே. காலை உணவுத் திட்டத்தில் ஏராளமான குளறுபடிகள் இருக்கின்றன.

ஊட்டச்சத்து மிக்கதாக இருக்க வேண்டிய உணவை நெடுந்தூரத்தில் இருந்து சமைத்துக் கொண்டு வருவதால் கெட்டுப்போய் விடுகிறது. உணவு எனும் பெயரில் எதை வேண்டுமானாலும் கொடுக்கலாம், அரசுப் பள்ளியில் படிப்பது ஏழை குழந்தைகள் தானே என்ற அலட்சியப் போக்குடன் செயல்படுவது ஏற்புடையதல்ல.

போலி விளம்பரங்களின் மூலம் காலை உணவில் நடக்கும் குளறுபடிகளை மறைத்துவிடலாம் என்று எண்ணக் கூடாது என அதில் குறிப்பிட்டுள்ளாா் நயினாா் நாகேந்திரன்.

X
Dinamani
www.dinamani.com