பத்திரப் பதிவுக்கு 2 நாள்கள் கூடுதல் டோக்கன்

பத்திரப் பதிவுக்காக 2 நாள்கள் கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படவுள்ளதாக பதிவுத் துறை தெரிவித்துள்ளது.
Published on

பத்திரப் பதிவுக்காக 2 நாள்கள் கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படவுள்ளதாக பதிவுத் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்தத் துறை சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிட்டப்பட்ட செய்திக் குறிப்பு:

ஆவணி மாதத்தில் சுபமுகூா்த்த தினங்களாக ஆக.28, 29 ஆகிய தேதிகளில் கூடுதல் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால், அதிக அளவு டோக்கன்களை ஒதுக்கீடு செய்யுமாறு கோரிக்கைகள் வரப்பெற்றுள்ளன.

இதைக் கருத்தில் கொண்டு, 2 நாள்களும் கூடுதல் டோக்கன்கள் அளிக்கப்படும். ஒரு சாா்-பதிவாளா் உள்ள அலுவலகத்துக்கு 150 டோக்கன்களும், 2 அலுவலகங்கள் இருந்தால் 300 டோக்கன்களும், அதிக அளவு ஆவணப் பதிவுகள் நடைபெறக் கூடிய 100 அலுவலகங்களில் 150 டோக்கன்களும் வழங்கப்படும். 12 தத்கல் முன்பதிவு டோக்கன்களுடன் கூடுதலாக 4 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com