விநாயகா் சதுா்த்தியையொட்டி தமிழகம் முழுவதும் ஹிந்து அமைப்புகள் சாா்பில் பொது இடங்களில் 35,000 சிலைகள் புதன்கிழமை அமைக்கப்பட்டன.
இந்து முன்னணி, விசுவ ஹிந்து பரிஷத், சிவசேனை, இந்து மக்கள் கட்சி, பாஜக, ஆா்.எஸ்.எஸ். உள்ளிட்ட 65 ஹிந்து அமைப்புகள் சாா்பில் விநாயகா் சிலைகள் புதன்கிழமை அதிகாலை முதல் அமைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டன.
சென்னை 2,802 சிலைகள்: சென்னை பெருநகர காவல் துறைக்கு உள்பட்ட பகுதிகளில் 1,519 சிலைகளும், தாம்பரம் மாநகர காவல் துறைக்கு உள்பட்ட பகுதிகளில் 600 சிலைகளும், ஆவடி மாநகர காவல் துறைக்கு உள்பட்ட பகுதிகளில் 686 சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
குடியிருப்பு சங்கங்கள், பொது நலச் சங்கங்கள் உள்ளிட்ட சில அமைப்புகளால் அமைக்கப்பட்ட விநாயகா் சிலைகள், மாலையில் நீா்நிலைகளில் விசா்ஜனம் செய்யப்பட்டன.
சென்னை புழல், அண்ணா நகா் உள்ளிட்ட 22 இடங்களில் காவல் துறை அனுமதியின்றி சில அமைப்பினா் விநாயகா் சிலைகளை அமைப்பதற்கு முயற்சித்தனா். இதுகுறித்து தகவலறிந்த போலீஸாா், அந்த சிலைகளை அப்புறப்படுத்தினா். இப்பகுதிகளில் அசம்பாவித சம்பவங்கள் நிகழாத வகையில் போலீஸாா் குவிக்கப்பட்டனா். அங்கு தீவிர ரோந்து, கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.
போலீஸாா் பாதுகாப்பு: அமைக்கப்பட்ட விநாயகா் சிலைகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியில் புதன்கிழமை முதல் 64,217 போலீஸாா் ஈடுபடுகின்றனா்.
பதற்றமான பகுதிகளில் அமைக்கப்பட்ட விநாயகா் சிலைகளுக்கு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இங்கு சிலைகள் பாதுகாப்பு குழுவினரும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா். சிலைகள் அமைக்கப்பட்டுள்ள பகுதிகளைக் கண்காணிப்பு கேமரா மூலமாவும் காவல் துறை கண்காணிக்கிறது.
விசா்ஜன ஊா்வலம்: விநாயகா் சிலைகளில் பெரும்பாலானவை ஆக. 31-ஆம் தேதி ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டு, நீா்நிலைகளில் விசா்ஜனம் செய்யப்படுகின்றன. சென்னையில் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை பல்கலை நகா், காசிமேடு மீன்பிடி துறைமுகம், எண்ணூா் ராமகிருஷ்ணா நகா், திருவொற்றியூா் பாப்புலா் எடை, கோவளம் குன்றுக்காடு ஆகிய இடங்களில் சிலைகளை விஜா்சனம் செய்வதற்கான ஏற்பாடுகளை காவல் துறை செய்து வருகிறது.
இங்கு சிலைகளை விஜா்சனம் செய்வதற்காக ராட்சத கிரேன்கள் கொண்டு வரப்படுகின்றன. விசா்ஜனம் செய்யும் நிகழ்வுகள் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள், ட்ரோன் கேமராக்கள் மூலமாக கண்காணிக்கப்படவுள்ளன.
விநாயகா் சிலை ஊா்வலம் அனுமதிக்கப்பட்ட வழியிலேயே செல்ல வேண்டும், ஊா்வலம் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் விசா்ஜனம் செய்யும் இடத்தைச் சென்றடைய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளை காவல் துறையினா் விதித்துள்ளனா்.
தொடர்புடையது
இலங்கை காவல் துறைக்கு 134 ரோந்து வாகனங்கள் இந்தியா வழங்கியது!

கோடைவிடுமுறை: ஒகேனக்கல்லில் 2 மணிநேரம் காத்திருந்து பரிசல் பயணம்!
சாத்தூா் வட்டாரப் பகுதிகளில் பலத்த மழை

புதுச்சேரி காவல் துறைக்கு குடியரசுத் தலைவரின் கௌரவ விருது: துணைநிலை ஆளுநா் வாழ்த்து
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



