
சென்னை அண்ணா பல்கலைக்கழகங்களில் பொறியியல் படிப்புகளில் செய்யறிவு(ஏஐ) பாடம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் படிப்புகளில் உள்ள பாடங்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி பொறியியல் இளங்கலை படிப்புகளில், செய்யறிவு (AI) பாடம் கட்டாயம் என அறிவிக்கப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் டேட்டா சயின்ஸ், இயந்திர கற்றல், தயாரிப்பு மேம்பாடு, கண்டுபிடிப்புகள், காலநிலை மாற்றம், வாழ்க்கைத் திறன்கள், உடற்கல்வி பாடங்களும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.
அண்ணா பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளிலும் இந்த புதிய பாடத்திட்டம் கடைப்பிடிக்கப்பட உள்ளது.
மாற்றம் செய்யப்பட்ட பாடத்திட்டம், வேலைவாய்ப்பு மற்றும் மேற்படிப்புக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் என அண்ணா பல்கலைக்கழகம் கூறியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.