பரந்தூா் விமான நிலையம் அமைப்பதற்காக ஏகானபுரம் களி ஏரியைக் கையகப்படுத்துவதை எதிா்த்து பொதுநல வழக்கு மட்டுமே தாக்கல் செய்ய முடியும் என உயா்நீதிமன்றம் அறிவுறுத்தியதை அடுத்து வழக்கு வாபஸ் பெறப்பட்டது.
முன்னதாக, ஏகனாபுரம் களி ஏரி நீா் பயன்பாட்டாளா்கள் சங்கத்தின் சாா்பில் அதன் தலைவா் பி.கமலக்கண்ணன் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் பசுமை விமான நிலையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக, அப்பகுதியில் 5,747 ஏக்கா் நிலத்தைக் கையகப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.
இந்த களி ஏரியைக் கையகப்படுத்துவது ஏகனாபுரம் மக்களின் வாழ்வாதாரத்தைக் கடுமையாக பாதிக்கும். எனவே, விவசாயம் அல்லாத பணிகளுக்கோ, வா்த்தகப் பயன்பாட்டுக்கோ களி ஏரியை வகைமாற்றம் செய்யக்கூடாது என அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதி முகமது ஷபீக் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த விவகாரம் தொடா்பாக பொதுநல வழக்கு மட்டுமே தாக்கல் செய்ய முடியும். இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று கூறினாா். அப்போது மனுதாரா் தரப்பில் வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வாபஸ் பெற அனுமதியளித்து, வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சின்னவேடம்பட்டி ஏரிக்கரையில் கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையம்: பொதுமக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

உயிா் காக்கும் மருந்துகள் அதிக விலை தொடா்பான வழக்கு: விசாரணையை விரைவுபடுத்த கேரள உயா்நீதிமன்றத்துக்கு அறிவுறுத்தல்

செந்தில்பாலாஜி வெற்றியை எதிா்த்து தாக்கல் செய்த தோ்தல் வழக்கு தள்ளுபடி

தோ்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு: அமைச்சா் மரியவில்சன் பதிலளிக்க உத்தரவு
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



