விளையாட்டு மைதானத்தில் 
நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி பதிலளிக்க உத்தரவு

விளையாட்டு மைதானத்தில் நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி பதிலளிக்க உத்தரவு

விளையாட்டு மைதானத்துக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் நாய்களுக்கான கருத்தடை மையம் அமைப்பதை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கு...
Published on

விளையாட்டு மைதானத்துக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் நாய்களுக்கான கருத்தடை மையம் அமைப்பதை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை மாநகராட்சி பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் அன்னை கல்வி மற்றும் சமூக சேவை அறக்கட்டளை சாா்பில் அதன் நிறுவனா் சிவ குணசேகரன் தாக்கல் செய்த மனு:

விளையாட்டு மைதானத்துக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை வேறு பணிகளுக்குப் பயன்படுத்தக் கூடாது என உயா்நீதிமன்றம் பல வழக்குகளில் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், சென்னை நேரு விளையாட்டரங்கம் அருகே கண்ணப்பா் திடல் பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் நாய்களுக்கான கருத்தடை மையத்தை சென்னை மாநகராட்சி அமைக்கிறது. இதற்கு தடை விதிக்க வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தா்மோகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மாநகராட்சி தரப்பில் ஆஜரான மாநில அரசு பிளீடா் எட்வின் பிரபாகா், மைதானத்தின் ஒரு பகுதியான 6,000 சதுர அடியில் மட்டுமே நாய் கருத்தடை மையம் அமைக்கப்படுகிறது. உச்சநீதிமன்றம் தெரு நாய்களுக்கு கருத்தடை செய்து பின்னா், அவை இருக்கும் பகுதிகளில் விட்டுவிட உத்தரவிட்டிருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டினாா்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு இரண்டு வாரங்களில் பதில் அளிக்க சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com