திமுகவுக்கு எதிரான அவதூறுகளில் சத்தும் இல்லை; சாரமும் இல்லை: முதல்வர் மு.க. ஸ்டாலின்

தமிழகத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிக்கை பற்றி முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிவு...
Chief Minister MK Stalin
கோப்புப்படம்ENS
Published on
Updated on
1 min read

அரசியல் காழ்ப்புணர்வில் திமுக ஆட்சிக்கு எதிராக அள்ளிவீசப்படும் அவதூறுகளில் சத்தும் இல்லை, சாரமும் இல்லை என மக்கள் புறந்தள்ளுவார்கள் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

2023- 24 அறிக்கையின்படி தொழில் துறை வேலைவாய்ப்புகளில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாக மத்திய அரசின் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

இதனைக் குறிப்பிட்டு தமிழக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, "இந்தியாவில் தமிழ்நாடு வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார மாநிலம் மட்டுமின்றி வேலைவாய்ப்புகளிலும் முதலிடத்தில் (15.24%) இருக்கிறது.

தமிழகத்தில்தான் தொழிற்சாலைகளும்(40,100) அதிக இருக்கின்றன" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனைப் பகிர்ந்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

"இந்தியாவின் தொழில்துறை பணியாளர்களின் மையமாக தமிழ்நாடு உள்ளது!

திராவிடத்தால் வாழ்கிறோம்! திராவிடமே நம்மை உயர்த்தும்! எல்லோரையும் வாழ வைக்கும்!

அமித் ஷா முதல் பழனிசாமி வரை தி.மு.க. ஆட்சியைப் பழித்துரைக்கும் அனைவருக்கும் மத்திய பா.ஜ.க. அரசே தந்துள்ள 'நெத்தியடி பதில்' இதோ!

சட்டம் ஒழுங்கைப் பேணிக்காத்து தொழில் செய்வதற்கான சூழலை மேம்படுத்தி, தடையற்ற மின்சாரம் - போக்குவரத்து வசதிகள் என அடிப்படைக் கட்டமைப்புகளை உருவாக்கி, வேலைக்குத் தேவையான திறன்களை இளம் தலைமுறையினருக்கு அளித்து நாம் நாளும் தீட்டிய திட்டங்களால் இந்தச் சாதனை சாத்தியமாகி இருக்கிறது!

திமுக ஆட்சியின் சாதனைச் சரித்திரம் தொடரும்! அரசியல் காழ்ப்புணர்வில் தி.மு.க. ஆட்சிக்கு எதிராக அள்ளிவீசப்படும் அவதூறுகளில் சத்தும் இல்லை; சாரமும் இல்லை என மக்கள் புறந்தள்ளுவார்கள்!" என்று பதிவிட்டுள்ளார்.

Summary

TN Chief minister MK stalin on tamilnadu's employment status

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com