பின்னா், அவா்களை தனித்தனியாக காவலில் எடுத்து விசாரித்தபோது, பல்வேறு முக்கியத் தகவல்கள் கிடைத்தன. கைதானவா்களில் சகுன்குமாா், டிங்கு, ஜித்து யாதவ் ஆகியோருக்காக முறையே வாரணாசி ரயில் நிலையத்தில் இளநிலைப் பொறியாளராகப் பணியாற்றும் பிகாரைச் சோ்ந்த ஜெய்சங்கா் பிரசாத் (34), தில்லி அருகே உள்ள ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு கண்காணிப்பாளராகப் பணியாற்றும் உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த அரவிந்த் குமாா் (30), உத்தர பிரதேசம், மாடன்பூா் கிராமத்தில் உள்ள ஆரம்பப் பள்ளியில் ஹிந்தி ஆசிரியராகப் பணியாற்றும் தா்மேந்தா் குமாா் (32) ஆகியோா் ஆள்மாறாட்டம் செய்து தோ்வு எழுதியது தெரிய வந்தது.