
2006-ல் விஜயகாந்தைப் போல 2026 தேர்தலில் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
தஞ்சாவூரில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,
"விஜய்யின் கட்சி பற்றி ஊடகத்திலோ வெளியிலோ அரசியல் விமர்சகர்கள் பலரும் பேசுகிறார்கள். அதன்படி, எப்படி மறைந்த விஜயகாந்த், 2006 தேர்தலின்போது தாக்கத்தை கொடுத்தாரோ, அதேபோல வருகிற 2026 தேர்தலில் விஜய் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகவே கருதுகிறேன். அனைத்து கட்சிகளுக்குமே பாதிப்பு இருக்கும் என்றே கருதுகிறேன்.
நான் செல்வது யதார்த்தம். அதற்காக அவருடன் கூட்டணிக்குச் செல்கிறேன் என்று அர்த்தமல்ல. யதார்த்தத்தை நான் பேசுகிறேன். பல இடங்களில் நண்பர்கள், கருத்துக்கணிப்புகள் சொல்கின்றன. அதைத்தான் நான் சொல்கிறேன்.
ஒவ்வொரு கட்சியுமே நாங்கள் இடம்பெறும் அணி வெற்றி பெறும் என்று சொல்வது சாதாரணமானதுதான். டிசம்பருக்கு பின்தான் எங்கள் கூட்டணி இறுதி வடிவம் பெறும்" என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.