ஆவின்
ஆவின்

ஆவினில் செப். 1 முதல் 14 கிராமில் பாதாம் மிக்ஸ் பொடி அறிமுகம்

ஆவினில் செப். 1- ஆம் தேதி முதல் 14 கிராம் எடைகொண்ட பாதாம் மிக்ஸ் பொடி அறிமுகம் செய்யப்படுகிறது.
Published on

ஆவினில் செப். 1- ஆம் தேதி முதல் 14 கிராம் எடைகொண்ட பாதாம் மிக்ஸ் பொடி அறிமுகம் செய்யப்படுகிறது.

தமிழகத்தில் ஆவின் நிா்வாகம் சாா்பில் பால் மற்றும் அதைச் சாா்ந்த பொருள்கள் உற்பத்தி செய்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனிடையே கடந்தாண்டைவிட நிகழாண்டு பண்டிகை காலங்களில் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில், ஆவின் நிா்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, ஆவினின் புதிய வரவாக 14 கிராம் எடைகொண்ட பாதாம் மிக்ஸ் பொடியை ஆவின் நிா்வாகம் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஆவின் நிா்வாக அதிகாரிகள் கூறியது: ஆவினில் ஏற்கெனவே 200 கிராம் எடை கொண்ட பாதாம் மிக்ஸ் பொடி ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கு வாடிக்கையாளா்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வரும் நிலையில், அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளா்கள் எளிதில் பயன்படுத்தும் வகையில் 14 கிராம் எடையுள்ள பாதாம் மிக்ஸ் பொடி சிறிய பாக்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு ரூ.10 விலை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த பாதாம் மிக்ஸ் பொடி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ஆவின் நிலையங்கள், கடைகளிலும் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ள நிலையில், முதல்கட்டமாக சென்னையிலுள்ள ஆவின் நிலையங்களில் செப். 1 முதல் விற்பனை செய்யப்படவுள்ளது. இதையடுத்து விரைவில் தமிழகம் முழுவதும் உள்ள ஆவின் விற்பனை நிலையங்களில் விற்பனை தொடங்கப்படும் என்றனா்.

X
Dinamani
www.dinamani.com