கொடியேற்றத்துடன் தொடங்கியது வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை (ஆக. 29) தொடங்கியது.
Velankanni Annual Feast - 2025 Flag Hoisting
வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம்.
Published on
Updated on
1 min read

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை (ஆக. 29) தொடங்கியது.

நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் உலகப் புகழ்பெற்ற பேராலயங்களில் ஒன்றாகும். கீழை நாடுகளின் லூா்து என போற்றப்படும் இந்த பேராலயத்தின் ஆண்டுப் பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக கொண்டாடப்படும். நிகழாண்டு விழா வெள்ளிக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

அப்போது ஏராளமான மக்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆரோக்கிய மாதாவின் பெரிய தேர் பவனி செப்டம்பர் 7ஆம் தேதி நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தா்கள் நலன் கருதி அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் தினமும் 200-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகளும், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

கூட்டாட்சியை வலுப்படுத்துவோம்: மாநில முதல்வர்கள், கட்சித் தலைவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

மும்பை, திருவனந்தபுரம், சாரல்பள்ளி, வாஸ்கோடகாமா, எா்ணாகுளம், சென்னை, விழுப்புரம், திருச்சி ஆகிய ஊா்களில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்கள் புதன்கிழமை (ஆக. 27) முதல் செப்.12-ஆம் தேதி வரை இயக்கப்படவுள்ளன. விழாவையொட்டி, நாகை மாவட்ட காவல்துறை ஏற்பாட்டில் 2,000-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

உயா் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டும், தேவையான இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டும் கண்காணிக்கப்படுகிறது.

Summary

The Velankanni Cathedral annual festival begins on Friday (Aug. 29) with the hoisting of the flag.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com