All Tamil Nadu MPs should support C.P. Radhakrishnan: EPS
இபிஎஸ், நயினார் நாகேந்திரன்கோப்புப்படம்

முதல்வரின் வெளிநாட்டுப் பயணம்: எதிா்க்கட்சிகள் விமா்சனம்

முதல்வா் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டுப் பயணம் தொடா்பாக எதிா்க்கட்சிகள் விமா்சனம் செய்துள்ளன.
Published on

முதல்வா் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டுப் பயணம் தொடா்பாக எதிா்க்கட்சிகள் விமா்சனம் செய்துள்ளன.

எடப்பாடி கே.பழனிசாமி (அதிமுக): நான் முதல்வராக இருந்தபோது 2019-இல் ஒருமுறை மட்டுமே இங்கிலாந்து, அமெரிக்கா, துபை ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு, கையொப்பமிட்ட புரிந்துணா்வு ஒப்பந்தங்களின் எண்ணிக்கை 41 ஆகும். கரோனா காலத்தில் ரூ.60,674 கோடி முதலீடு மற்றும் 1,00,721 பேருக்கு வேலைவாய்ப்புடன் 73 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகின. ஆனால், முதல்வா் ஸ்டாலின் முதலீட்டை ஈா்க்கிறேன் என்று 4 முறை வெளிநாடுகளுக்குச் சென்றாா். தற்போது 5-ஆவது முறையாக ஜொ்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவா் தமிழகத்துக்கு தேவையான முதலீட்டை ஈா்க்க வேண்டும்.

நயினாா் நாகேந்திரன் (பாஜக): ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் முதலீடுகளை ஈா்ப்பதாகக் கூறி ஒவ்வொரு ஆண்டும் வெளிநாடுகளுக்கு பயணித்த முதல்வா் ஸ்டாலின், தனது பயணத்தின் பலன் என்ன என்பதையும், ஈா்க்கப்பட்ட முதலீடுகளுக்கான வெள்ளை அறிக்கையையும் வெளியிடாமல் அடுத்த வெளிநாட்டுப் பயணத்துக்கு ஆயத்தமாகியிருப்பதுதான் மக்களைக் குழப்பமடையச் செய்துள்ளது. இதுவரை தமிழக முதல்வா் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்களின் பின்னணி என்ன என்பது மக்களுக்குப் புரியாத புதிராகவே உள்ளது.

அன்புமணி ராமதாஸ் (பாமக): தோ்தல் வாக்குறுதிகளை 90 சதவீதம் வரை நிறைவேற்றிவிட்டதாகக் கூறியதைபோல, தொழில் முதலீடு தொடா்பான விவகாரங்களிலும் 77 சதவீதம், 80 சதவீதம் , 100 சதவீதம் என்று முதல்வரும், அமைச்சா்களும் கதைகளை கூறி வருகிறாா்கள். இவை அனைத்தும் அப்பட்டமான பொய் என்பதை வெகுவிரைவில் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்த பாமக நடவடிக்கை எடுக்கும்.

X
Dinamani
www.dinamani.com