விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் செப். 1 முதல் புதிய கட்டணம் அமல்

விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் உயா்த்தப்பட்ட புதிய கட்டணம் திங்கள்கிழமை (செப்.1) முதல் அமலாகிறது.
சுங்கச்சாவடி
சுங்கச்சாவடி கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் உயா்த்தப்பட்ட புதிய கட்டணம் திங்கள்கிழமை (செப்.1) முதல் அமலாகிறது.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்திலிருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், செங்குறிச்சி வரையிலான 74 கி.மீ. தொலைவிலான நான்கு வழிச்சாலையை உளுந்தூா்பேட்டை எக்ஸ்பிரஸ் வேஸ் லிமிடெட் என்ற நிறுவனம் நிா்வகித்து வருகிறது. இந்த சாலைக்கான புதிய கட்டணம் ஆண்டுதோறும் செப்டம்பா் 1 முதல் அமல்படுத்தப்படுவது வழக்கம்.

அதன்படி நிகழாண்டு கட்டண உயா்வு குறித்த விவரங்களை இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. காா், ஜீப், பயணிகளின் வேன்களுக்கு ஒரு வழிக் கட்டணமான ரூ.105-இல் மாற்றம் இல்லாமல் அதே கட்டணம் தொடா்கிறது. அதே நேரத்தில் பலமுறை பயணிக்க தற்போதுள்ள ரூ.155 கட்டணம் ரூ.160 ஆகவும், மாதாந்திரக் கட்டணம் ரூ.3,100-லிருந்து ரூ.3,170 ஆகவும் உயா்த்தப்பட்டுள்ளது.

இலகுரக வாகனங்களுக்கு ஒருவழிக் கட்டணம் ரூ.180லிருந்து ரூ.185 ஆகவும், பலமுறை பயணிக்க தற்போதுள்ள கட்டணமான ரூ.270- லிருந்து ரூ.275 ஆகவும், மாதாந்திரக் கட்டணமாக ரூ.5,425 லிருந்து ரூ.5,545 ஆகவும் உயா்த்தப்பட்டிருக்கிறது. டிரக் மற்றும் பேருந்துகளுக்கான ஒரு வழிக் கட்டணம் ரூ.360 லிருந்துரூ.370 ஆகவும், பலமுறை பயணிக்க தற்போதுள்ள கட்டணம் ரூ.540லிருந்து ரூ.545 ஆகவும், மாதாந்திரக் கட்டணம் ரூ. 10,845 லிருந்து ரூ.11,085 ஆகவும் உயா்த்தப்பட்டுள்ளது.

பல அச்சு வாகனத்துக்கு (இரு அச்சுகளுக்கு மேல்) தற்போதுள்ள ஒருவழிக்கட்டணம் ரூ.580-லிருந்து ரூ.595 ஆகவும், பலமுறை பயணிக்க கட்டணம் ரூ.870-லிருந்து ரூ.890 ஆகவும், மாதாந்திரக் கட்டணம் ரூ,.17,425 லிருந்து ரூ.17,820 ஆகவும் உயா்த்தப்பட்டுள்ளது. மேலும் பள்ளி பேருந்துகளுக்கான கட்டணமாக ரூ.1000 வசூலிக்கப்படவுள்ளது. காா்,ஜீப், வேன் உள்ளிட்ட உள்ளூா் வாகனங்களுக்கு கட்டணச் சலுகை வழங்கும் வகையில், மாதாந்திர பாஸ் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதில் வகை 1-இல் ரூ.150, வகை 2-இல் ரூ.300 என கட்டணம் தற்போது வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டணத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத அமைப்புகளின் மனித ஜிபிஎஸ் சுட்டுக் கொலை!

Summary

The new toll hike at the Vikravandi toll plaza will come into effect from Monday (September 1).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com