
ஜெர்மனி சென்றுள்ள முதல்வர் ஸ்டாலினுக்கு ஜெர்மனிவாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தமிழகத்துக்கு சர்வதேச முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் 7 நாள் பயணமாக ஜெர்மனி, பிரிட்டன் நாடுகளுக்கு சனிக்கிழமையில் புறப்பட்டார்.
இந்த நிலையில், ஜெர்மனி சென்றடைந்த முதல்வர் ஸ்டாலினுக்கு ஜெர்மனிவாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ஸ்டாலின் அப்பாவை ஜெர்மனிக்கு வரவேற்கிறோம் என்ற பதாகையுடன் சிறுமி ஒருவரும், பூங்கொத்துடன் முதல்வர் ஸ்டாலினை வரவேற்றார்.
அவர்களின் வரவேற்பைப் பெற்றுக்கொண்ட முதல்வர் ஸ்டாலின், தனது எக்ஸ் பக்கத்தில்,
இங்குள்ள எனது தமிழ்க் குடும்பத்தின் பாசத்தைக் கண்டு நெகிழ்ச்சியடைந்தேன். இங்கிருந்து தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்கும், பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்கவும் நடவடிக்கை எடுப்பேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
சா்வதேச முதலீடுகளை ஈா்க்கும் வகையில், இந்தப் பயணத்தில் பல்வேறு புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: சென்னை: நள்ளிரவு கனமழையால் விமான சேவை பாதிப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.