

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ஏற்பட்ட படகு விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 18 பேர் காயமடைந்தனர். கராச்சியின் மனோராவில் ஞாயிற்றுக்கிழமை(நவ. 30) இந்த விபத்து நிகழ்ந்தது. மனோரா கடற்கரையில் 22 பயணிகளுடன் சென்ற படகு இன்னொரு சுற்றுலாப் படகின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இது குறித்து தகவலறிந்த பாகிஸ்தான் கடற்படையினர் படகிலிருந்தவர்களை மீட்டு கரை சேர்த்தனர். இந்த விபத்தில் படகிலிருந்தவர்களில் ஒரு சிறுமியும் பெண்மணியும் உயிரிழந்தனர். 18 பேர் காயமடைந்தனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.