

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு வழங்கப்பட்டிருந்த துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது.
ஓபிஎஸ் - இபிஎஸ் பிரிந்துள்ள நிலையில், கட்சி ஒருங்கிணைப்பு குறித்து பேசியதுடன், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை சந்தித்ததால் அதிமுகவில் இருந்து செங்கோட்டையனை எடப்பாடி பழனிசாமி நீக்கினார்.
இதனைத் தொடர்ந்து, கடந்த வாரம் கோபிசெட்டிபாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்து செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.
இந்த நிலையில், செங்கோட்டையன் வீட்டுக்கு தமிழக காவல்துறை தரப்பில் அளிக்கப்பட்டிருந்த துப்பாக்கி ஏந்திய ஆயுதப் படை போலீஸ் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது.
இதையடுத்து வட இந்தியாவைச் சேர்ந்த இரண்டு பவுன்சர்கள் அவரின் வீட்டுக்கு பாதுகாப்புப் பணிக்காக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.