

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகத்திற்காக பல்வேறு நதிகளிலிருந்து எடுத்துவரப்பட்ட நீர் காஞ்சி கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்புப் பூஜைகளுக்குப் பின் ஊர்வலமாகப் புறப்பட்டு திருக்கோயிலை அடைந்தது.
பஞ்சபூத தலங்களில் ஒன்றானதும் கோயில் நகரின் பல நூற்றாண்டுகளைக் கண்ட சிறப்புமிக்க காஞ்சி ஏகாம்பரநாதர் திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா வரும் டிசம்பர் 8ஆம் தேதி காலை நடைபெற உள்ளது. திருக்கோயில் பணிகள் அனைத்தும் இறுதிக்கட்டம் அடைந்த நிலையில் யாகசாலை அமைக்கும் பணியும் நிறைவு பெற்றது.
இந்த நிலையில் யாகசாலையில் வைக்கப்படும் முக்கிய 5 கலசங்களுக்கான புனித நீர் பல்வேறு நதிகளிலிருந்து எடுத்து வரப்பட்டு காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் திருக்கோயில் சிறப்புப் பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு, மேளதாளங்கள் கைலாய வாக்கியங்கள் முழங்க இரு குடைகள் நடுவே திருக்குடங்கள் ஊர்வலமாகக் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் திருக்கோயிலுக்குச் சென்றடைந்தது.
இதையும் படிக்க: போலி மருந்து தொழிற்சாலைக்கு சீல்: சிபிசிஐடி போலீசார் அதிரடி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.