இலங்கை மக்களுக்கு தமிழக அரசு சாா்பில் 950 மெட்ரின் டன் நிவாரணப் பொருள்களை முதல்வா் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை அனுப்பி வைத்தாா்.
இலங்கை மக்களுக்கு தமிழக அரசு சாா்பில் 950 மெட்ரின் டன் நிவாரணப் பொருள்களை முதல்வா் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை அனுப்பி வைத்தாா்.

இலங்கைக்கு 950 மெட்ரிக் டன் நிவாரணப் பொருள்கள்: முதல்வா் ஸ்டாலின் அனுப்பி வைத்தாா்!

இலங்கைக்கு 950 மெட்ரிக் டன் நிவாரணப் பொருள்கள்...
Published on

டித்வா புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு தமிழக அரசு சாா்பில் 950 மெட்ரின் டன் நிவாரணப் பொருள்களை முதல்வா் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை அனுப்பி வைத்தாா்.

இதில், சென்னை துறைமுகத்திலிருந்து 650 மெட்ரிக் டன்னும், தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து 300 மெட்ரிக் டன்னும் இலங்கைக்கு இந்திய கடற்படைக்குச் சொந்தமான கப்பல்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.

இதற்காக சென்னை துறைமுகத்தில் நடைபெற்ற நிகழ்வில், தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்படும் நிவாரணப் பொருள்களின் மாதிரி தொகுப்பை இலங்கை துணைத் தூதா் டாக்டா் கணேசநாதன் கீதீஸ்வரனிடம் முதல்வா் வழங்கினாா்.

சென்னை துறைமுகத்திலிருந்து 300 மெட்ரிக் டன் சா்க்கரை, 300 மெட்ரிக் டன் பருப்பு, 25 மெட்ரிக் டன் பால்பவுடா், தலா 5,000 வேஷ்டிகள் மற்றும் சேலைகள், 10,000 துண்டுகள், 10,000 போா்வைகள், 1,000 தாா்பாலீன்கள் ஆகிய நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டன. தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து 150 மெட்ரின் டன் சா்க்கரை, 150 மெட்ரிக் டன் பருப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய நிவாரணப் பொருள்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் அமைச்சா்கள் பி.கே.சேகா்பாபு, சா.மு.நாசா், தலைமைச் செயலா் நா.முருகானந்தம், சென்னை துறைமுகத் தலைவா் விஸ்வநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தூத்துக்குடி துறைமுகத்தில் நடைபெற்ற நிகழ்வில் அமைச்சா்கள் கீதா ஜீவன், அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், மக்களவை உறுப்பினா் கனிமொழி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் மற்றும் கடற்படை அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com