

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 149 பள்ளிகளுக்கு டிச-8ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பழைமையான ஏலவாா்குழலி சமேத ஏகாம்பரநாதா் கோயில் திருப்பணிகள் ரூ.29 கோடியில் நடைபெற்று முடிந்துள்ளன. வரும் டிச.8 ஆம் தேதி காலை 5.45 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் ஏகாம்பரநாதா் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 149 பள்ளிகளுக்கு டிச-8ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பை காஞ்சிபுரம் முதன்மைக் கல்வி அலுவலர் வெளியிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.