கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நட்பின் அடிப்படையில்தான் பாஜகவுக்கு ஆதரவளித்தோம்: செல்லூர் ராஜு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நட்பின் அடிப்படையில்தான் பாஜகவுக்கு ஆதரவளித்தோம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

News image

மதுரையில் செய்தியாளர்களைச் சந்திக்கும் செல்லூர் ராஜு,

Updated On :6 டிசம்பர் 2025, 10:25 am

இணையதளச் செய்திப் பிரிவு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நட்பின் அடிப்படையில்தான் பாஜகவுக்கு ஆதரவளித்தோம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

மதுரையில் அவர் அளித்த பேட்டியில், "மாநகராட்சியின் குடிநீர் தேவைக்காக முல்லைப்பெரியாறில் இருந்து செயல்படுத்தப்படும் அம்ரூத் முழுமையடையாமலே முதல்வர் ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார். எதற்காக இவ்வளவு அவசரம்? இரண்டு மாதங்களாக மேயர் இல்லாமல் மாநகராட்சி பணிகள் முடங்கியுள்ளன. செங்கோட்டையன் போனது அதிமுக எனும் ஆல மரத்தில் ஒரு இலை உதிர்வது போலதான். பழுத்த இலை ஒன்று கீழே விழுவதால் ஆலமரம் சாய்ந்து விட்டது என அர்த்தமில்லை.

செங்கோட்டையனுக்கு மக்கள் ஓட்டு போடவில்லை, இரட்டை இலைக்காக, அதிமுகவுக்காகதான் மக்கள் ஓட்டு போட்டார்கள். அதிமுகவை செங்கோட்டையன் வெளியேறி போனது நியாயமா? எம்.ஜி.ஆர் கட்சியில்தான் கடைசி வரை இருப்பேன் என சொல்பவர்தானே உண்மையாக ரோஷம் உள்ளவர். தமிழக அரசியலில் புதிதாக யார் வந்தாலும் இப்போது மக்கள் மத்தியில் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவர் மட்டுமே உள்ளனர். காக்கைக்கு தன் குஞ்சு பொன்குஞ்சு என்பது போலதான் தானும் முதல்வர் ஆவேன் என விஜய் பேசி கொண்டிருக்கிறார்.

மதுரையில் இந்து - இஸ்லாமியர்கள் அண்ணன் தம்பிகளாக வாழ்கிறோம். திமுக பிளவை ஏற்படுத்த முயற்சிக்கிறது. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனை அதிமுக சார்பில் எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா சென்று சந்தித்தது மனிதாபிமான அடிப்படையில்தான். நட்பின் அடிப்படையில்தான் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தோம். இதில் அரசியல் இல்லை. நாங்கள் என்ன பாஜகவுடன் சேர்ந்து திருப்பரங்குன்றம் விவகாரத்துக்காக ஆர்ப்பாட்டம், போராட்டம் செய்தோமா? இல்லையே.

கூட்டணி என்பது தோலில் போடப்பட்ட துண்டு. கூட்டணியில் இருந்தாலும் கொள்கை தனித்தனியாக இருக்கும். தேர்தலில் பார்ட்னராக இருப்போம். எந்த நிலைமை வந்தாலும் நான் அதிமுக வேட்டியை மாற்ற மாட்டேன்" என்றார்.

Summary

Former AIADMK minister Sellur Raju has said that we supported the BJP on the basis of friendship in the Thiruparankundram issue.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.