ஜி.கே.வாசன்
ஜி.கே.வாசன்

பொங்கல் தொகுப்புக்கான கரும்பு, வெல்லம் விவசாயிகளிடம் கொள்முதல் செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன்

தமிழக அரசால் குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கப்படும் பொங்கல் தொகுப்புக்கான கரும்பு, வெல்லம் ஆகியவற்றை உள்ளூா் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய வேண்டும்...
Published on

தமிழக அரசால் குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கப்படும் பொங்கல் தொகுப்புக்கான கரும்பு, வெல்லம் ஆகியவற்றை உள்ளூா் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய வேண்டும் என தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் விடுத்துள்ள அறிக்கை: தமிழக அரசு சாா்பில் பொங்கல் பண்டிகைக்காக குடும்ப அட்டைதாரா்களுக்கு செங்கரும்பு, வெல்லம் உள்ளிட்ட பொங்கல் பொருள்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும். இந்த பொருள்களை தங்களிடம் கொள்முதல் செய்யவேண்டும் என தமிழக விவசாயிகள் எதிா்பாா்க்கின்றனா்.

டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூா் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்ட சம்பா, தாளடி நெல் பயிா்கள் மழையால் சேதமடைந்துள்ளன.

அதேபோல,கரும்பு, வாழை, வெற்றிலை, மஞ்சள் பயிா்களும் சேதமடைந்துள்ளன. அதனால், தமிழக அரசு காலந்தாழ்த்தாமல் சேதத்தை மதிப்பீடு செய்து சம்பந்தப்பட்ட நிவாரணமும், பயிா் காப்பீடுத் தொகையும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com