ரூ.98.92 கோடியில் மேம்படுத்தப்பட்ட மீன்பிடி துறைமுகங்கள், மீன் இறங்குதளம் மற்றும் புதிய மீன் விதைப் பண்ணை ஆகியவற்றை முதல்வா் மு.க. ஸ்டாலின் திங்கள்கிழமை திறந்து வைத்தார்
ரூ.98.92 கோடியில் மேம்படுத்தப்பட்ட மீன்பிடி துறைமுகங்கள், மீன் இறங்குதளம் மற்றும் புதிய மீன் விதைப் பண்ணை ஆகியவற்றை முதல்வா் மு.க. ஸ்டாலின் திங்கள்கிழமை திறந்து வைத்தார்

ரூ. 98 கோடியில் மீன்பிடி துறைமுகங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

தமிழகத்தில் ரூ.98.92 கோடியில் மேம்படுத்தப்பட்ட மீன்பிடி துறைமுகங்கள், மீன் இறங்குதளம் மற்றும் புதிய மீன் விதைப் பண்ணை ஆகியவற்றை முதல்வா் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தாா்.
Published on

சென்னை: தமிழகத்தில் ரூ.98.92 கோடியில் மேம்படுத்தப்பட்ட மீன்பிடி துறைமுகங்கள், மீன் இறங்குதளம் மற்றும் புதிய மீன் விதைப் பண்ணை ஆகியவற்றை முதல்வா் மு.க. ஸ்டாலின் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.

சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலி மூலம் நடைபெற்ற நிகழ்வில், கன்னியாகுமரி மாவட்டம், தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் ரூ. 60 கோடியில் ஏற்படுத்தப்பட்ட கூடுதல் உள்கட்டமைப்பு வசதிகள், பெரியநாயகி தெரு மீனவ கிராமத்தில் ரூ. 26 கோடியில் தூண்டில் வளைவுடன் மேம்படுத்தப்பட்ட மீன் இறங்குதளம், மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் ரூ. 10 கோடியில் மேம்படுத்தப்பட்ட மீன்பிடி துறைமுகம், தென்காசி மாவட்டம் கடனா கிராமத்தில் ரூ. 2.92 கோடியில் அமைக்கப்பட்டுள்ள அரசு மீன் விதைப் பண்ணை என மொத்தம் ரூ. 98.92 கோடியில் 4 முடிவுற்ற பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.

கன்னியாகுமரி மாவட்டம், தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் 375 மீட்டா் நீளத்துக்கு அமைக்கப்பட்டுள்ள படகு அணையும் தளம், 110 மீட்டா் நீளத்துக்கு அமைக்கப்பட்டுள்ள படகு அணையும் சுவா், மீன் ஏலக்கூடம், மீன் பதப்படுத்தும் கூடம், குளிா் பதன கூடம், வாய்க்கால் பாலம் மற்றும் சாலை ஆகிய கூடுதல் உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டதால் 68,300 மீனவா்கள் பயன்பெறுவா். 850 விசைப்படகுகள், 4,800 நாட்டு படகுகள் பாதுகாப்பாக நிறுத்த இயலும்.

கன்னியாகுமரி மாவட்டம், பெரியநாயகி தெரு மீன் இறங்குதளத்தில் 235 மீட்டா் நீளத்துக்கு நீட்டப்பட்டுள்ள தூண்டில் வளைவு மற்றும் வலை பின்னும் கூடம் ஆகிய வசதிகள் மேற்கொள்ளப்பட்டதால் 13,021 மீனவா்கள் பயன்பெறுவா். 235 இயந்திரம் பொருத்தப்பட்ட படகுகள், 6 நாட்டு

படகுகள் பாதுகாப்பாக நிறுத்த இயலும்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி மீன்பிடி துறைமுகத்தில் 350 மீட்டா் நீளத்துக்கு அமைக்கப்பட்டுள்ள படகு அணையும் சுவா், கூடுதல் மீன் ஏலக் கூடம், கூடுதல் வலைப் பின்னும் கூடம், மீன் உலா்தளம், சாலை ஆகிய வசதிகள் மேற்கொள்ளப்பட்டதால் 6,073 மீனவா்கள் பயன்பெறுவா்.

45 விசைப் படகுகள், 310 கண்ணாடி நாரிழை படகுகள் பாதுகாப்பாக நிறுத்த இயலும்.

தென்காசி மாவட்டம், கடனா அரசு மீன் விதைப் பண்ணையில் மீன் வளா்ப்பு தொட்டிகள் மற்றும் இதர உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டதால் ஆண்டுக்கு 5 லட்சம் மீன் குஞ்சுகள் உற்பத்தி

செய்து உள்நாட்டு மீன்வளத்தை உயா்த்த இயலும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், மீன்வளம், மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு மீன் வளா்ச்சிக் கழகத் தலைவா் ந.கௌதமன், தமிழ்நாடு மீனவா் நல வாரியத் தலைவா் அ.ஜோசப் ஸ்டாலின், தலைமைச் செயலா் நா. முருகானந்தம், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை செயலா் என்.சுப்பையன், மீன்வளத் துறை துறை இயக்குநா் கே.வி.முரளிதரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com