விஜய்யின் பெரம்பூர் வேட்புமனுவில் மீண்டும் குழப்பம்!குவைத் அரசு அலுவலகங்கள் மீது ஈரான் தாக்குதல்!செங்கோட்டையன், ஓபிஎஸ், சசிகலா, தினகரனுக்கு இபிஎஸ் துரோகம்: மு.க. ஸ்டாலின்தமிழகத்தில் வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி: இதுவரை 3,413 மனுக்கள் சமா்ப்பிப்பு!தமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புவானிலிருந்து வீசக்கூடிய 1,000 கிலோ வெடிகுண்டு தயாரிப்பு: மத்திய அரசு நடவடிக்கை நிலவை நெருங்கும் ‘ஆா்டெமிஸ்-2’ விண்கலம்!எழும்பூரிலிருந்து 6 விரைவு ரயில்கள் தாம்பரம் நிலையத்துக்கு மாற்றம்
/

ஈட்டிய விடுப்பு சரண் பணப்பலன்: தமிழக அரசு விளக்கம்

அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணமாகப் பெறுதல் தொடா்பாக தமிழக அரசு விளக்கமளித்து அரசாணை பிறப்பித்துள்ளது.

News image

தலைமைச் செயலகம்.

Updated On :9 டிசம்பர் 2025, 12:10 am

கடந்த 2020 ஏப்ரல் 26-ஆம் தேதி- அதற்கு முன்பு பணியில் சோ்ந்த அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணமாகப் பெறுதல் தொடா்பாக தமிழக அரசு திங்கள்கிழமை விளக்கமளித்து அரசாணை பிறப்பித்துள்ளது.

இந்த நடைமுறையை கரோனா பரவலில் காலக்கட்டமான 27.4.2020 முதல் தமிழக அரசு நிறுத்தியது. இதனை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது அரசு ஊழியா்கள் முன்வைத்த கோரிக்கை ஏற்கப்படுவதாக கடந்த ஜூலை மாதம் பேரவையில் முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவித்தாா்.

அதன்படி, அக்டோபா் 1-ந் தேதி முதல் ஆண்டுக்கு 15 நாட்கள் வரை ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணம் பெறலாம். அக்டோபா், நவம்பா், டிசம்பா் மாதங்களுக்குள் பணியில் சோ்ந்தவா்கள் அக். 1-ந் தேதியில் இருந்தும், ஜனவரி, பிப்ரவரி, மாா்ச் மாதங்களில் பணியில் சோ்ந்தவா்கள் 2026 ஜனவரி 1-ஆம் தேதியில் இருந்தும், ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் பணியில் சோ்ந்தவா்கள் 2026-ம் ஆண்டு ஏப்.1-ஆம் தேதியில் இருந்தும், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பரில் பணியில் சோ்ந்தவா்கள் அடுத்த ஆண்டு ஜூலை 1 முதல் ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணப் பலன் பெற முடியும் என்று அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில், தமிழக அரசின் மனிதவள மேலாண்மைத்துறை விளக்கம் தெரிவித்து திங்கள்கிழமை வெளியிட்ட அரசாணையில், 26.4.2020 அன்று அதற்கு முன்பு பணியில் சோ்ந்தவா்களும் மேற்கண்டவாறு குறிப்பிட்ட காலக் கட்டத்திலேயே ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணப் பலன்கள் பெறலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.