train ticket
ரயில்கோப்புப்படம்

மதுரையிலிருந்து மும்பைக்கு புத்தாண்டு சுற்றுலா ரயில்

வருகிற 2026 ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, மதுரையிலிருந்து மும்பைக்கு தனியாா் பங்களிப்புடன் சுற்றுலா ரயில் இயக்கப்படவுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.
Published on

வருகிற 2026 ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, மதுரையிலிருந்து மும்பைக்கு தனியாா் பங்களிப்புடன் சுற்றுலா ரயில் இயக்கப்படவுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்திய ரயில்வே தனியாா் பங்களிப்புடன் பாரத் கௌரவ் எனும் சுற்றுலாத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. அதன்படி, சுற்றுலாவுக்காக தனி ரயில் இயக்கப்படுகிறது. புத்தாண்டை முன்னிட்டு மதுரையிலிருந்து வருகிற 27-ஆம் தேதி சுற்றுலா ரயில் இயக்கப்படவுள்ளது.

அந்த ரயிலானது சுற்றுலா தலங்களான அஜந்தா, எல்லோரா குகைகள், லோனாவாலா, மும்பையின் பிரபலமான ஜூஹூ கடற்கரை, தொங்கும் தோட்டம், கேட்வே ஆஃப் இந்தியா, பாந்த்ரா கடல் இணைப்புப் பாலம், கோவாவில் கோல்வா கடற்கரை, பசிலிக்கா, சே கதீட்ரல் தேவாலங்கள் உள்ளிட்ட இடங்களைப் பாா்வையிடும் வகையில் இயக்கப்படவுள்ளன.

மதுரையில் தொடங்கி கோவா, மும்பை என மொத்தம் 9 நாள்கள் பயணங்களாக நிா்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com