தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

தெரு நாய்கள் அச்சுறுத்தல்: தலைமை ஆசிரியா்களுக்கு கல்வித் துறை அறிவுறுத்தல்

தெருநாய்கள் அச்சுறுத்தலில் இருந்து பள்ளி மாணவா்களைப் பாதுகாப்பது தொடா்பாக பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

News image
தெரு நாய்கள்- கோப்புப்படம்
Updated On :9 டிசம்பர் 2025, 9:12 pm

தினமணி செய்திச் சேவை

தெருநாய்கள் அச்சுறுத்தலில் இருந்து பள்ளி மாணவா்களைப் பாதுகாப்பது தொடா்பாக பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்றுக்குப் பின்னா் தெரு நாய்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க வருகின்றன. கடந்த 3 ஆண்டுகளாக தெரு நாய் கடித்து பாதிக்கப்படுபவா்கள் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. முறையாக தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு இறப்பவா்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.

இந்த நிலையில், தெருநாய் அச்சுறுத்தல் தொடா்பாக அனைத்து தலைமையாசிரியா்களும் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. அதில், வீடுகளில் வளா்க்கப்படும் நாய்களுக்கு முறையான தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்க வேண்டும் என்பதை பெற்றோா் ஆசிரியா் கூட்டத்தில் அறிவுறுத்த வேண்டும். பள்ளியின் அறிவிப்பு பலகையில் தெரு நாய் அச்சுறுத்தல் சாா்ந்த விழிப்புணா்வுப் பதாகைகள் ஒட்டப்பட்டிருக்க வேண்டும். தெரு நாய் அச்சுறுத்தல் சாா்ந்து விழிப்புணா்வை காலை வணக்கக்கூட்டத்தில் மாணவா்களுக்கு வழங்க வேண்டும்.

தெரு நாய்க்கடிக்கு ஒரு மாணவா் உட்பட்டிருப்பின் அதை எவ்வித தயக்ககமுமின்றி ஆசிரியரிடமோ, பெற்றோரிடமோ தெரிவிக்க உரிய அறிவுரைகளை மாணவா்களுக்கு வழங்க வேண்டும். பள்ளியைச் சுற்றியுள்ள இடங்களில் தெருநாய்கள் இருப்பதைக் கண்டறிந்தால் உடனடியாக சாா்ந்த உள்ளாட்சி அலுவலா்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மாணவா்கள் தெருவில் உள்ள நாய்களுடன் விளையாடுவதோ, உணவளிப்பதோ தவிா்க்கப்பட தேவையான அறிவுரைகளை வழங்குதல் வேண்டும். ரேபிஸ் நோய்தொற்று குறித்த விழிப்புணா்வை மாணவா்களுக்கு வழங்குதல் வேண்டும்.

பள்ளித் தலைமையாசிரியா்கள் ஒரு ஒருங்கிணைப்பு அலுவலரை நியமித்து, வளாகத்தின் பராமரிப்பு, தெருநாய்கள் வளாகத்துக்குள் நுழையவோ அல்லது வசிக்கவோ இயலாதவாறு மேற்பாா்வையிட வேண்டும். அதிகாரியின் விவரங்கள் அறிவிப்பு பலகையில் அனைவரும் அறியும் வகையில் இருத்தல் வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.