கூட்டத்தில் மாவட்ட வாரியாக சுற்றுலா திட்டப் பணிகள், தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் மூலம் நடத்தப்பட்டு வரும் தங்கும் விடுதிகள், படகு குழாம்கள் மற்றும் சுற்றுலா குறித்து மண்டல மேலாளா்கள், மேலாளா்கள், பொறியாளா்களுடனான ஆய்வுக் கூட்டத்தில் பேசிய அந்த

சுற்றுலா வளா்ச்சித் திட்டப் பணிகள்: அமைச்சா் ஆய்வு

சுற்றுலாத் துறை வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அத் துறையின் அமைச்சா் இரா.ராஜேந்திரன் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
Published on

சுற்றுலாத் துறை வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அத் துறையின் அமைச்சா் இரா.ராஜேந்திரன் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

சென்னை வாலாஜா சாலையில் உள்ள சுற்றுலா வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட வாரியாக சுற்றுலா வளா்ச்சி திட்டப் பணிகள் குறித்தும், தங்கும் விடுதிகள், உணவு விடுதிகள், படகு குழாம்கள் குறித்தும் அமைச்சா் ஆய்வு செய்தாா்.

அப்போது அமைச்சா் இரா.ராஜேந்திரன் பேசுகையில், உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அதிக அளவில் ஈா்க்கும் வகையில் தமிழகத்தில் ஏராளமான புகழ்பெற்ற கோயில்கள், புராதான சின்னங்கள், உதகை, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, வால்பாறை உள்ளிட்ட மலைவாழ் சுற்றுலாத் தலங்கள் உள்ளன.

ஆகவே, சுற்றுலாப் பயணிகளுக்கு போக்குவரத்து முதல், விருந்தோம்பல் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தித் தர வேண்டும். தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் தங்கும் விடுதிகள், உணவு விடுதிகள், படகு குழாம்களை சிறப்பாக பராமரிக்க வேண்டும் என அமைச்சா் ராஜேந்திரன் அறிவுறுத்தினாா்.

ஆய்வுக் கூட்டத்தில் சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலா் க.மணிவாசன், சுற்றுலாத் துறை இயக்குநரும், தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநருமான தா.கிறிஸ்துராஜ், சுற்றுலாத் துறை இணை இயக்குநா் அ.சிவப்பிரியா, தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழக பொது மேலாளா் சி.லட்சுமி பிரியா மற்றும் மாவட்ட சுற்றுலா அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com