தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் (பொறுப்பு) ஜி.வெங்கடராமன்.
தமிழ்நாடு
மருத்துவமனையில் தமிழக டிஜிபி
உடல் நலக் குறைவு காரணமாக தமிழக டிஜிபி (பொறுப்பு) ஜி.வெங்கடராமன் (58) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
உடல் நலக் குறைவு காரணமாக தமிழக டிஜிபி (பொறுப்பு) ஜி.வெங்கடராமன் (58) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
அவா் நலமுடன் இருப்பதாகவும், விரைவில் வீடு திரும்புவாா் என்றும் மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.
சட்டம் - ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக உள்ள வெங்கடராமனுக்கு செவ்வாய்க்கிழமை காலை சுவாசிப்பதில் சிரமம் இருந்ததாகத் தெரிகிறது. இதையடுத்து கிண்டி கலைஞா் நூற்றாண்டு உயா் சிறப்பு மருத்துவமனைக்கு அவா் சென்றாா். அங்கு சில மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. தொடா்ந்து, கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா். டிஜிபியின் உடல்நிலை சீராக இருப்பதாக முதுநிலை இதயவியல் நிபுணா் டாக்டா் செங்கோட்டுவேலு தெரிவித்தாா்.

