

தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் (பொறுப்பு) ஜி.வெங்கடராமன் (58) உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெறுவதால் வரும் 25ம் தேதி வரை விடுமுறையில் இருப்பதால், அந்தப் பொறுப்பை அவருக்குப் பதிலாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை டிஜிபியாக உள்ள அபய் குமார் சிங் கவனிப்பார் என தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டம் - ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக உள்ள வெங்கடராமனுக்கு செவ்வாய்க்கிழமை (டிச. 9) காலை சுவாசிப்பதில் சிரமம் இருந்ததாகத் தெரிகிறது. இதையடுத்து கிண்டி கலைஞா் நூற்றாண்டு உயா் சிறப்பு மருத்துவமனைக்கு அவா் சென்றாா். அங்கு சில மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. தொடா்ந்து, கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா். அதன்பின், டிஜிபியின் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.