

திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள சிக்கந்தர் தர்காவுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, சிக்கந்தர் தர்காவில் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை மாநகர் ஆணையர் அலுவலகத்துக்கு அனுப்பிய மின்னஞ்சலில், வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மதுரை ஆட்சியர் அலுவலகத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், சிக்கந்தர் தர்கா மற்றும் திருப்பரங்குன்றம் பெரிய ரத வீதி பள்ளிவாசலிலும் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணை, தொல்லியல் துறையைச் சேர்ந்த 7 பேர் கொண்ட குழு இன்று(டிச. 10) ஆய்வு மேற்கொண்டனர்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழக தலைமைச் செயலர், காவல் துறையின் சட்டம்-ஒழுங்கு கூடுதல் இயக்குநர் (ஏடிஜிபி) காணொலி மூலம் வருகிற 17-ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமர்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.