

உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர், தமிழகத்தில் எச்.ராஜா, ஆளுநர் ஆர்.என்.ரவி போல செயல்படுவதா? என்று சென்னையில் முன்னாள் நீதிபதி ஹரி பரந்தாமன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் நீதிபதி ஹரி பரந்தாமன் பல்வேறு விவகாரங்கள் குறித்தும் பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், நீதிபதி ஒருவர், எச்.ராஜா, ஆளுநர் ஆர்.என்.ரவி போல் செயல்படக் கூடாது. அரசியல் சிந்தாந்தம் இருந்தாலும் நீதிமன்றம் தீர்ப்பில் கொண்டு வரக் கூடாது என ஓய்வுபெற்ற நீதிபதி ஹரி பரந்தாமன் தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், திருப்பரங்குன்றம் தீர்ப்பு வழங்கிய நீதிபதி சுவாமிநாதன் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதியிடம் பதவி நீக்கப் பரிந்துரைக் கடிதம் வழங்க வேண்டும்.
மதநல்லிக்கணத்தை ஒரு பொருட்டாக நீதிபதி சுவாமிநாதன் பார்க்கவில்லை. இவர் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர்.
நீதிமன்றம் தீர்ப்பு நடைமுறைப்படுத்தவில்லை என்றால் அன்றே அவமதிப்பு வழக்கு உடனே போட முடியுமா ?
வழக்குகளை விசாரித்த முறையே சரியில்லை. வழக்கு போடாமல் 144 தடை உத்தரவை எப்படி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ரத்து செய்ய முடியும் ? இதற்காக தனியாக வழக்கு தொடுத்து இருக்க வேண்டும். விசாரணை நடத்தி இருக்க வேண்டும். இது தான் சட்ட நடைமுறை.
நீதிபதி ஒருவர், எச்.ராஜா, ஆளுநர் ஆர்.என்.ரவி போல் செயல்படக் கூடாது. அரசியல் சிந்தாந்தம் இருந்தாலும் நீதிமன்றம் தீர்ப்பில் கொண்டு வரக் கூடாது. நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் சட்டம் - ஒழுங்கை பற்றி நினைக்காமல் தனது உத்தரவை அமல்படுத்துவதிலே தான் உறுதியாக இருக்கிறார்.
தீபம் ஏற்றும் அதிகாரம் கோயில் நிர்வாகத்திடம் முறையாக இருக்கிறது. தீபம் ஏற்றும் நேரத்தில் அமைதியை காப்பது அவசியம். மாவட்ட ஆட்சியர், காவல் அதிகாரி முறையாக செயல்பட்டு இருக்கின்றனர்.
ஆனால் அதிகாரிகள் உடனடியாக சில மணி நேரத்தில் ஆஜராக வேண்டும் சொல்வது எப்படி சாத்தியம் ? என்றார்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.