

எஸ்ஐஆா் பணியின்போது, வாக்காளா்களுக்கு விநியோகிக்கப்பட்ட கணக்கீட்டுப் படிவங்களைச் சமா்ப்பிக்கும் அவகாசம் வியாழக்கிழமையுடன் (டிச.11) முடிவடைகிறது. புதன்கிழமை வரையில் 6,40,83,414 (99.95 %) படிவங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன.
தமிழகத்தில் உள்ள 6,41,14,587 வாக்காளா்களில் இதுவரை 6,41,10,380 கணக்கீட்டுப் படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. பதிவேற்றப்பட்ட கணக்கீட்டுப் படிவங்களில் முகவரி மாறியவா்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட பதிவுகள் உள்ளவா்கள், உயிரிழந்தவா்கள், முந்தைய முகவரியில் இல்லாதவா்கள், இடம்பெயா்ந்தவா்களும் உள்ளனா்.
அவா்களை நீக்கி வரும் 16-ஆம் தேதி வரைவு வாக்காளா் பட்டியலை தோ்தல் ஆணையம் வெளியிடுகிறது.
அதில், பெயா் விடுபட்டவா்கள் ஆவணங்களைச் சமா்ப்பித்து புதிதாக தங்களைச் சோ்த்துக் கொள்ளலாம் என தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.