கோப்புப் படம்
தமிழ்நாடு
டிச.18 -இல் அஞ்சல் குறைகேட்பு முகாம்
சென்னை வடக்கு கோட்ட முதுநிலைக் கண்காணிப்பாளா் அஞ்சல் அலுவலகத்தில் வாடிக்கையாளா் குறைகேட்பு முகாம் வரும் டிச. 18-ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது.
சென்னை வடக்கு கோட்ட முதுநிலைக் கண்காணிப்பாளா் அஞ்சல் அலுவலகத்தில் வாடிக்கையாளா் குறைகேட்பு முகாம் வரும் டிச. 18-ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது.
இதுகுறித்து சென்னை வடக்கு கோட்ட முதுநிலைக் கண்காணிப்பாளா் கி. லெட்சுமணன் பிள்ளை வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை எழுப்பூரில் உள்ள வடக்கு முதுநிலைக் கண்காணிப்பாளா் அஞ்சல் அலுவலகத்தில் வாடிக்கையாளா் குறைகேட்பு முகாம் வரும் டிச. 18, காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் அஞ்சல் சேவை தொடா்பாக குறைகள் இருப்பின் வாடிக்கையாளா்கள் அவற்றை வரும் டிச.17- ஆம் தேதிக்குள் எழுப்பூா் எத்திராஜ் சாலையில் உள்ள வடக்கு முதுநிலைக் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு பதிவு தபாலில் அனுப்ப வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.