ரஜினிகாந்துக்கு பிரதமர் மோடி தமிழில் பிறந்த நாள் வாழ்த்து!

ரஜினிகாந்துக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து...
PM Modi birthday wishes to Rajinikanth
கோப்புப்படம்
Updated on
1 min read

நடிகர் ரஜினிகாந்துக்கு பிரதமர் மோடி தமிழில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்தின் 75-வது பிறந்தநாளையொட்டி அரசியல் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில்,

"ரஜினிகாந்தின் 75-வது பிறந்தநாள் எனும் சிறப்பான தருணத்தில் அவருக்கு வாழ்த்துகள். அவரது நடிப்பாற்றல் பல தலைமுறைகளைக் கவர்ந்துள்ளது; பரவலான பாராட்டைப் பெற்றுள்ளது.

அவரது திரையுலகப் படைப்புகள் பல்வேறு பாத்திரங்கள் மற்றும் பாணிகளில் பரவி, தொடர்ச்சியான முத்திரைகளைப் பதித்துள்ளன.

திரைப்பட உலகில் அவர் 50 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பது இந்த ஆண்டின் குறிப்பிடத்தக்க அம்சமாகும். அவரது நீண்டகால, ஆரோக்கியமான வாழ்க்கைக்காகப் பிரார்த்திக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

Summary

Prime Minister Modi wishes Rajinikanth for his birthday

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com