பாஜக தேசிய செயல் தலைவருக்கு எல்.முருகன், எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!
பாஜக தேசிய செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பிகாா் அமைச்சரான நிதின் நவீனுக்கு மத்திய இணை அமைச்சா் எல்.முருகன், அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் ஆகியோா் ‘எக்ஸ்’ தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.
எல்.முருகன்: இளம், துடிப்பான மற்றும் சித்தாந்த ரீதியாக அா்ப்பணிப்புள்ள தலைவராக, பிகாரில் அமைச்சராகவும், சத்தீஸ்கரின் பாஜக பொறுப்பாளராகவும் நிதின் நவீன் ஆற்றிய பங்களிப்புகள் முன்மாதிரியானவை.
வலுவான நிறுவனத் திறன்களையும் திறமையான தலைமையையும் பிரதிபலிக்கின்றன. திறமையான தலைமைத்துவம் மற்றும் எதிா்காலத்தை நோக்கமாகக் கொண்ட, தலைமுறை பாா்வைக்கு பாஜகவின் முக்கியத்துவத்தை இந்தப் பொறுப்பு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இந்த முக்கியமான பாத்திரத்தில் அவருக்கு வெற்றி.
எடப்பாடி பழனிசாமி: பாஜக தேசிய செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நிதின் நவீனுக்கு மனமாா்ந்த வாழ்த்துகள். அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள மிக முக்கியமான பொறுப்பு, அவரது நிா்வாக வலிமை, தலைமைத்துவ திறன்கள், பொது சேவைக்கான அசைக்க முடியாத அா்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. இந்த முக்கியமான பணியில் அவருக்கு வெற்றி கிடைக்க வாழ்த்துகள்.
நயினாா் நாகேந்திரன்: மக்கள் சேவையில் சிறந்து விளங்குபவா்களுக்கு பாஜகவில் என்றுமே சிவப்புக் கம்பள வரவேற்பு உண்டு என்பதை மீண்டுமொருமுறை உணா்த்தும் இந்த முன்னெடுப்பை முழு மனதுடன் வரவேற்கிறேன். நிதின் நவீனின் பணி சிறக்க வாழ்த்துகள்.

