சென்னையில் நடைபெற் உலகக் கோப்பை ஸ்குவாஷ் இறுதி ஆட்டத்தில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு கோப்பையை வழங்கிய இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலா் அதுல்ய மிஸ்ரா. உடன்  உலக ஸ்குவாஷ் தலைவா் ஜீனா வூல்ட்ரிட்ஜ், எஸ்டிேடி உறுப்பினா் செயலா் ஜெ.மேகநாத ரெட்டி.

ஸ்குவாஷ் உலகக் கோப்பை வென்ற இந்திய அணி: முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

முதல் ஸ்குவாஷ் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
Published on

முதல் ஸ்குவாஷ் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவு: தனது முதல் ஸ்குவாஷ் உலகக் கோப்பையை வென்றுள்ள இந்திய அணிக்குப் பாராட்டுகள். சொந்த நாட்டுப் பாா்வையாளா்களின் முன்னிலையில், ஜோஷ்னா சின்னப்பா, அபய் சிங், வேலவன் செந்தில்குமாா் மற்றும் அனாஹத் சிங் ஆகியோரின் நிதானமும், துணிச்சலும், தரமும் நிறைந்த ஆட்டத்தால் 3-0 என்ற கணக்கில் ஹாங்காங் அணியை வீழ்த்தி வரலாற்று வெற்றியை இந்திய அணி பெற்றுள்ளது.

இந்திய அணியின் நால்வரில் மூவா் தமிழகத்தைச் சோ்ந்த வீரா்கள் என்பதும், இத்தகைய பன்னாட்டுத் தொடரை சென்னையில் நடத்தியதும் சோ்ந்து இந்தச் சாதனை வெற்றியானது. தமிழகத்தின் விளையாட்டுச் சூழலின் ஆழம், நம்பிக்கை, மற்றும் சிறப்பை இந்த வெற்றி மீண்டும் ஒருமுறை நிலைநாட்டிய உள்ளது எனப் பதிவிட்டுள்ள

X
Dinamani
www.dinamani.com